search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மதுரை வழியாக செல்லும் ரெயில் போக்குவரத்து மாற்றம்

    நாளை முதல் 10-ந்தேதி வரை மதுரை வழியாக செல்லும் ரெயில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    மதுரை:

    மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அதிகாரி வீராசுவாமி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை- தாழையூத்து இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே அந்த வழியாக செல்லும் ரெயில் போக்குவரத்தில் நாளை (3-ந்தேதி) முதல் 10-ந்தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி திருச்சி- திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 22627/ 22628) 9-ந்தேதி தவிர மற்ற நாட்களில் கோவில்பட்டி வரை மட்டுமே இயங்கும்.

    தாம்பரம்- நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்; 16191) மேற்கண்ட நாட்களில் திண்டுக்கல் வரை மட்டுமே இயங்கும். இந்த ரயில் வருகிற 8-ந்தேதி மட்டும் வழக்கம் போல செயல்படும்.

    நாகர்கோயில்- தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16192) மேற்கண்ட நாட்களில் திண்டுக்கல்லில் இருந்து புறப்படும். இந்த ரெயில் வருகிற 9-ந்தேதி மட்டும் வழக்கம் போல் செயல்படும்.

    பாலக்காடு- திருச்செந் தூர் பயணிகள் ரெயில் (வண்டி எண்: 56769/ 56770) மேற்கண்ட நாட்களில் கோவில்பட்டி- நெல்லை இடையே இரு மார்க்கங்களி லும் பகுதியாக ரத்து செய்யப் படும். இந்த ரெயில் வருகிற 9-ந்தேதி மட்டும் வழக்கம் போல செயல்படும்.

    பாலக்காடு- திருச்செந்தூர் பயணிகள் ரெயில் ( வண்டி எண் 567 69/567 70) வருகிற 4, 8-ந்தேதிகளில் மதுரை- நெல்லை இடையே இரு மார்க்கங்களிலும் பகுதியாக ரத்து செய்யப்படும்.

    திருச்செந்தூர்- பாலக்காடு பயணிகள் ரெயில் (வண்டி எண்: 56770) மதுரையில் இருந்து மாலை 6.45 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் வருகிற 9-ந்தேதி மட்டும் வழக்கம் போல செயல்படும்.

    நெல்லை- தாதர் வாரம் மும்முறை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 11022) நெல்லையில் இருந்து மாலை 3 மணிக்கு பதில் ஒரு மணி நேரம் தாமதமாக 4 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் வருகிற 9-ந்தேதி மட்டும் வழக்கம் போல் செயல்படும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×