என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
செய்திகள்
![கோவையில் கடைகள் அடைக்கப்பட்டதையடுத்து காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவையில் கடைகள் அடைக்கப்பட்டதையடுத்து காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.](https://img.maalaimalar.com/Articles/2020/Mar/202003072010288876_Tamil_News_Additional-security-for-37-Hindu-munnani-leaders_SECVPF.gif)
X
கோவையில் கடைகள் அடைக்கப்பட்டதையடுத்து காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் இந்து இயக்க தலைவர்கள் 37 பேருக்கு கூடுதல் பாதுகாப்பு
By
மாலை மலர்7 March 2020 8:10 PM IST (Updated: 7 March 2020 8:10 PM IST)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
இந்து முன்னணி பிரமுகர் தாக்கப்பட்டதையடுத்து கோவை மாவட்டத்தில் இந்து இயக்க தலைவர்கள் 37 பேருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
கோவை:
கோவையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஆனந்த் (வயது 33) என்பவர் மர்ம நபர்களால் தாக்கப்பட்டார்.
இந்த சம்பவம் கோவையில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க மாவட்டம் முழுவதும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் மாவட்டத்தில் உள்ள பா.ஜனதா, இந்து முன்னணி உள்பட இந்து இயக்க தலைவர்களுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் எங்கும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை மாநகர பகுதியில் பா.ஜனதா, இந்து முன்னணி உள்பட இந்து இயக்கங்களை சேர்ந்த 15 தலைவர்களுக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இதே போல புறநகர் பகுதியில் உள்ள 22 இந்து இயக்க தலைவர்களுக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
மேலும் இந்து இயக்க தலைவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அந்த போலீஸ் நிலைய போலீசார் 24 மணி நேரமும் ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.

Next Story
×
X