என் மலர்
செய்திகள்
X
மதுரையில் ஊரடங்கு மீறியதாக ஒரே நாளில் 612 பேர் கைது
Byமாலை மலர்21 April 2020 12:47 PM IST (Updated: 21 April 2020 12:47 PM IST)
மதுரையில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக ஒரே நாளில் 612 பேரை போலீசார் கைது செய்தனர், அவர்களிடமிருந்து 580 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மதுரை:
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் மதுரை மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் அமலில் உள்ளது.
இதன் காரணமாக பொதுமக்கள் வெளியில் நடந்து செல்லவும் வாகனங்களில் பயணம் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகரை பொறுத்தவரை நேற்று மட்டும் ஊரடங்கு தடை சட்டத்தை மீறியதாக 580 வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில் 612 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடமிருந்து 580 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட கடந்த மாதம் 23-ந்தேதி முதல் நேற்று வரை ஊரடங்குச் சட்டத்தை மீறியதாக 5408 வழக்குகள் பதிவாகியுள்ளன. இது தொடர்பாக 5745 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 3676 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Next Story
×
X