என் மலர்
செய்திகள்
நீலகிரி மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் நகர்பகுதிகளில் பொதுமக்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த, விவசாயிகள் உற்பத்தி செய்த பொருட்களைஅந்தந்த கிராமங்களில் விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதை சாதகமாக்கிய சில வியாபாரிகள், காய்கறி வகைகளை மொத்தமாக வாங்கி, வாகனங்களில் கொண்டு வந்து அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். மருந்தகங்களிலும், ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், தலைவலி மாத்திரைகள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக, மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்களிடம் இருந்து புகார் வந்தது.
இதையடுத்து இந்த புகார் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா மேற்பார்வைக்கு சென்றது. இது குறித்து அவர் கூறியதாவது:-
எல்லா அத்தியாவசிய பொருட்களும் தேவையான அளவுக்கு இருப்பு உள்ளது. இதனால் எந்த பொருளையும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக் கூடாது என ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. இதை மீறியும் கூடுதல் விலைக்கு யாராவது அத்தியாவசிய பொருட்களை விற்றால், 1077 என்ற எண்ணுக்கு, மக்கள் புகார் தெரிவிக்கலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.