என் மலர்
செய்திகள்
X
திருவாரூர் மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்23 July 2020 12:00 PM IST (Updated: 23 July 2020 12:00 PM IST)
திருவாரூர் மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முத்துப்பேட்டை:
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில தலைமை அலுவலகம் குறித்து அவதூறு பரப்பி, பொதுவுடைமை இயக்கத்தையும், சமூக செயல்பாட்டாளர்களையும் கொச்சைப்படுத்தி, மதவெறி மூலம் மக்களின் ஒற்றுமையைச்சீர்குலைக்கும், சமூக விரோதிகளை கைது செய்ய வலியுறுத்தி முத்துப்பேட்டையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் முருகையன் தலைமை தாங்கினார். இதில் தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் கார்த்திக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயற்குழு உறுப்பினர் தமிழ்மணி, ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன், நகர செயலாளர் செல்லத்துரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் கொரடாச்சேரி வெட்டாற்று பாலம் அருகில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் கேசவராஜ் தலைமை தாங்கினார். இதில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் பாலச்சந்தர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் சீனிவாசன், திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளர் தங்க.கலியபெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருவாரூர் பழைய பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான பூண்டி கே.கலைவாணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் வடிவழகன், திராவிட கழக மாவட்ட தலைவர் மோகன், ம.தி.மு.க. மாநில பிரசாரக்குழு செயலாளர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நீடாமங்கலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் நடேசதமிழார்வன் தலைமை தாங்கினார். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்,திராவிடர் கழகத்தினர் கலந்து கொண்டனர்.
வலங்கைமான் கடைத்தெருவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட தலைவர் ரெங்கராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் ராதா, தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பரசன், கிழக்கு ஒன்றிய செயலாளர் தட்சிணாமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் வட்டார தலைவர் சத்தியமூர்த்தி, ம..திமு.க. ஒன்றிய செயலாளர் பிரதாப். விடுதலை சிறுத்தைகள் ஒன்றிய செயலாளர் ராதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
குடவாசல் பஸ் நிலையம் அருகே இடதுசாரி இயக்கங்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்திய கம்யூனிஸ்டு கட்சி குடவாசல் ஒன்றிய செயலாளர் ஏ.சுப்ரவேல் தலைமை தாங்கினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் குடவாசல் ஒன்றிய செயலாளர் ஆர்.லட்சுமி, மாவட்ட குழு உறுப்பினர் ஏப்.கொரகோரியா மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் பாஸ்கர், முருகேசன், சுதாகர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் டி.ஜி.சேகர் ,கே.ராமதாஸ் ஆர்.இன்பநாதன், எஸ்.கிருஸ்வநாதன்,டி.ஏ.சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மன்னார்குடி நகராட்சி அலுவலகம் அருகில் இந்திய கம்யூனிஸ்டு, தி.மு.க மற்றும் கூட்டணி கட்சியினர்் ஆர்ப்பாட்டம் செய்தனர். மன்னார்குடி ஒன்றிய குழுவின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு மாநில நிர்வாக குழு உறுப்பினர் வை.செல்வராஜ் தலைமை தாங்கினார்.இதில் தி.மு.க.வை சேர்ந்த திருவாரூர் மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, இந்திய கம்யூனிஸ்டு ஒன்றியசெயலாளர் வீரமணி, தி.மு.க ஒன்றிய செயலாளர் தன்ராஜ், ஒன்றிய குழு உறுப்பினர் பாரதிமோகன், இளைஞர் மன்ற மாவட்ட செயலாளர் துரை அருள்ராஜன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் மகேந்திரன்,இளைஞர் மன்ற ஒன்றிய செயலாளர் பாப்பையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மன்னார்குடி நகர குழு சார்பில் பெரியார் சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் கலைச்செல்வன் தலைமை தாங்கினார். இதில் மாணவர் பெருமன்ற மாநிலத் தலைவர் குணசேகர், திராவிடர் கழக மாவட்டத் தலைவர் சித்தார்த்தன், காங்கிரஸ் கட்சி நகர தலைவர் கனகவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் திருஞானம், நகர செயலாளர் ஆறுமுகம், ம.தி.மு.க நகர செயலாளர் சன்சரவணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் அறிவுக்கொடி, இந்திய கம்யூனிஸ்ட் நகர துணைச்செயலாளர் தனிக்கோடி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Next Story
×
X