என் மலர்
செய்திகள்
X
காஞ்சிபுரத்தில் பொறுப்பு ஆட்சியருக்கும் கொரோனா தொற்று
Byமாலை மலர்23 July 2020 6:52 PM IST (Updated: 23 July 2020 6:52 PM IST)
காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையாவுக்கு கொரோனா ஏற்பட்ட நிலையில் அந்த பொறுப்பை ஏற்ற வருவாய்த்துறை அதிகாரிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்:
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை சென்னையில் குறைந்து வரும் நிலையில், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவுக்கு சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரி முத்துராமலிங்கம் அந்த பொறுப்பை ஏற்றார்.
இந்நிலையில் பொறுப்பு ஆட்சியராக நியமிக்கப்பட்ட வருவாய்த்துறை அதிகாரி முத்துராமலிங்கத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்ட நில அபகரிப்பு தடுப்புப்பிரிவு இயக்குநர் ராஜகோபால், மாவட்ட வருவாய் அதிகாரி பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் பொறுப்பையும் ராஜகோபால் கூடுதலாக கவனிப்பார் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Next Story
×
X