என் மலர்
செய்திகள்
X
ஊழியருக்கு கொரோனா- விளவங்கோடு தாலுகா அலுவலகத்தில் கருவூலம் மூடல்
Byமாலை மலர்23 July 2020 8:50 PM IST (Updated: 23 July 2020 8:50 PM IST)
விளவங்கோடு தாலுகா அலுவலகத்தில் கருவூலம் ஊழியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கருவூல அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது. கருங்கலில் டாஸ்மாக் கடையும் மூடப்பட்டது.
களியக்காவிளை:
விளவங்கோடு தாலுகா அலுவலக வளாகத்தில் கணக்குக் துறை கருவூல அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தென்காசியை சேர்ந்த 26 வயதுடைய ஒருவர் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். அவர் கண்ணக்கோடு பகுதியில் தங்கியுள்ளார். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டது. எனவே அவர் இடைக்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்தார். அதில் அவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து அவர் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதனையடுத்து கணக்குத் துறை கருவூல அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது. இதன் அருகில் குழித்துறை கிளை சிறைச்சாலை மற்றும் விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலகமும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட பெருந்தெரு பகுதியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதுவரை இந்த பகுதியை சேர்ந்த 14 -க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் நடமாடும் பரிசோதனை மையம் மூலம் பெருந்தெரு பகுதியில் கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்தி வருகிறது.
கருங்கல் சந்திப்பில் உள்ள டாஸ்மாக் கடையில் குழிக்கோடு ஆயினித்தறவிளை பகுதியை சேர்ந்த 43 வயதுடைய ஒருவர் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து டாஸ்மாக் கடை மூடப்பட்டது. இதனை தொடர்ந்து இங்கு வந்த மது பிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இரணியல் போலீஸ் நிலையத்தில் விழுந்தயம்பலத்தை சேர்ந்த 35 வயதுடைய ஒருவர் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டது. பரிசோதனை செய்த போது கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மேலும், இரணியல் போலீஸ் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

Next Story
×
X