என் மலர்
செய்திகள்
தூசி அருகே ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர் கொலை வழக்கில் மகன் கைது
தூசி அருகே ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூசி:
தூசியை அடுத்த கீழ்நாய்க்கன்பாளையம் கிராமம் ரோட்டு தெருவை சேர்ந்த நடராசன் மனைவி சந்திரா (வயது 65). ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர். இவர் கடந்த 3-ந்தேதி வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவருடன் வசித்துவந்த அவருடைய மகன் வெங்கடேசன் தலைமறைவாகி விட்டார்.
இதுகுறித்து தூசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் செய்யாறு துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து தலைமறைவான வெங்கடேசனை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலையில் தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் காசிம் உள்ளிட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மாமண்டூர் அருகே சாலையோரம் நின்றிருந்த வெங்கடேசனை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் தாயாரிடம் குடிக்க பணம் கேட்டபோது கொடுக்க மறுத்ததால் சந்திராவை கட்டையால் அடித்துவிட்டு, ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்ததை கண்டதும் பயந்து தப்பி ஓடியது தெரியவந்தது. தாயார் இறந்தது தெரியாது என்றும், தற்போது தாயாரை பார்க்க வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Next Story