search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீசார் விசாரணை
    X
    போலீசார் விசாரணை

    நாங்குநேரி அருகே கணவரை பிரிந்த இளம்பெண் கடத்தல்?- போலீசார் விசாரணை

    நாங்குநேரி அருகே கணவரை பிரிந்த இளம்பெண் கடத்தப்பட்டது குறித்து அவரது அண்ணன் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாங்குநேரி:

    நாங்குநேரி அருகே பரப்பாடியை அடுத்த சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 35). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி பொன் மலர் (30). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ராமகிருஷ்ணன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். 

    இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து பொன்மலர் தன்னுடைய கணவரை விட்டு பிரிந்து, தெற்கு இளையார்குளத்தில் உள்ள பெற்றோரின் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவில் வீட்டில் இருந்து வெளியே சென்ற பொன்மலர் மீண்டும் வீட்டுக்கு திரும்பி வராமல் மாயமானார். 

    இதற்கிடையே பொன்மலரின் அண்ணன், நாங்குநேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில், தன்னுடைய தங்கையை தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டைச் சேர்ந்த மகேஷ் பாபு கடத்தி சென்று இருக்கலாம் என்று தெரிவித்து இருந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×