என் மலர்
செய்திகள்
X
ஊரணிபுரத்தை சேர்ந்த நகைக்கடை அதிபர் கடத்தல் வழக்கில் மேலும் ஒருவர் கைது
Byமாலை மலர்13 Aug 2020 7:58 PM IST (Updated: 13 Aug 2020 7:58 PM IST)
ஊரணிபுரத்தை சேர்ந்த நகைக்கடை அதிபர் கடத்தல் வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
ஒரத்தநாடு:
தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே உள்ள ஊரணிபுரத்தை சேர்ந்தவர் சீமான்(வயது48). நகைக்கடை அதிபரான இவர் கடந்த மாதம் நடை பயிற்சிக்கு சென்ற போது பணத்துக்காக ஒரு கும்பலால் காரில் கடத்தி செல்லப்பட்டார். இது குறித்து திருவோணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தல் கும்பலை தேடி வந்தனர்.
இந்தநிலையில் போலீசார் தங்களை தீவிரமாக தேடுவதை அறிந்த கடத்தல் கும்பல் நாகை மாவட்டம் திட்டச்சேரி அருகே காரிலிருந்து சீமானை இறக்கி விட்டு தப்பி சென்றது. இது தொடர்பாக 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் பட்டுக்கோட்டை கண்டியன்தெருவை சேர்ந்த அத்திவெட்டி ஆனந்த் (வயது37), தஞ்சை மாதாக்கோட்டையை சேர்ந்த சின்னையன் (58), சின்னையனின் மகன் கதிரவன்(32), ஊரணிபுரம் பெரியார் நகரை சேர்ந்த வீடியோகிராபர் மதிவதணன்(58), பாப்பாநாட்டை அடுத்துள்ள தெற்குகோட்டையை சேர்ந்த மணி என்ற குணசேகர்(39), பிரகாஷ்(37), பட்டீஸ்வரத்தை சேர்ந்த சிவனேசன் மகன் சுப்பிரமணியன்(42) ஆகிய 7 பேரை கைது செய்தனர்.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேரை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த கரம்பயத்தை சேர்ந்த சிவனேசனை(42) சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் நேற்று புதுவிடுதி கிராமத்தில் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பிரசாந்த், சுரேஷ், சந்திரபோஸ் ஆகிய 3 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
Next Story
×
X