என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
செய்திகள்
![நீடாமங்கலத்தில் ரெயில்வே கேட் மூடப்பட்டதால் காத்திருந்த வாகனங்களை படத்தில் காணலாம். நீடாமங்கலத்தில் ரெயில்வே கேட் மூடப்பட்டதால் காத்திருந்த வாகனங்களை படத்தில் காணலாம்.](https://img.maalaimalar.com/Articles/2021/Jan/202101311643336994_Tamil_News_tamil-news-1-hour-public-suffered-as-the-railway-gate-was_SECVPF.gif)
X
நீடாமங்கலத்தில் ரெயில்வே கேட் மூடப்பட்டதால் காத்திருந்த வாகனங்களை படத்தில் காணலாம்.
நீடாமங்கலத்தில் 1 மணி நேரம் ரெயில்வே கேட் மூடப்பட்டதால் பொதுமக்கள் அவதி
By
மாலை மலர்31 Jan 2021 4:43 PM IST (Updated: 31 Jan 2021 4:43 PM IST)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
நீடாமங்கலத்தில் 1 மணி நேரம் ரெயில்வே கேட் மூடப்பட்டதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ரெயில் நிலையத்துக்கு நேற்று காலை காலி பெட்டிகளுடன் சரக்கு ரெயில் வந்தது. இதற்காக ரெயில்வே கேட் காலை 5.45 மணிக்கு மூடப்பட்டது. சரக்கு ரெயிலின் காலி பெட்டிகள் பிரித்து நிறுத்தும் பணி நடந்தது.
மீதமுள்ள காலி பெட்டிகளுடன் சரக்கு ரெயில் திருவாரூர் நோக்கி புறப்பட்டு சென்றது. அதே சமயம் கும்பகோணம் பகுதியில் இருந்து மன்னார்குடி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட ஊர்களுக்கும், வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், திருவாரூர் பகுதிகளில் இருந்து தஞ்சாவூர், திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட ஊர்களுக்கும், தஞ்சாவூரிலிருந்து வேளாங்கண்ணி, காரைக்கால் உள்ளிட்ட ஊர்களுக்கும், பட்டுக்கோட்டை, மன்னார்குடி பகுதியில் இருந்து கும்பகோணம், சென்னை போன்ற ஊர்களுக்கும் செல்லும் பஸ்கள், லாரிகள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்றன.
இந்த வாகனங்கள் மட்டுமின்றி வெளியூரில் இருந்து நீடாமங்கலம் வழியாக நோயாளிகளை தஞ்சையில் உள்ள மருத்துவமனைக்கு ஏற்றி சென்ற 2 ஆம்புலன்ஸ்களும் நீண்ட நேரம் ரெயில்வே கேட் அருகிலேயே நின்றது.
அதிகாலை நேரத்தில் ரெயில்வே கேட் ஒருமணி நேரத்திற்கும் மேல் மூடப்பட்டதால் வெளியூர் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள். காலை 5.45 மணிக்கு மூடப்பட்ட ரெயில்வே கேட் 6.56 மணிக்குத்தான் திறக்கப்பட்டது. இதனால் உள்ளூர் பொதுமக்களும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி அவதிப்பட்டனர்.
Next Story
×
X