என் மலர்
செய்திகள்
X
திருவண்ணாமலையில் 3-வது நாளாக அரசு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியல்
Byமாலை மலர்5 Feb 2021 4:34 PM IST (Updated: 5 Feb 2021 4:34 PM IST)
திருவண்ணாமலையில் 3-வது நாளாக அரசு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை:
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் திருவண்ணாமலை மாவட்டம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து 3-வது நாளாக நேற்று ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு தாலுகா அலுவலகம் அருகில் உள்ள பெரியார் சிலை அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர், எம்.ஆர்.பி. செவிலியர்கள், ஊர்ப்புற நூலகங்கள் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசுத்துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இதில் பல்வேறு துறை சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை போலீசார் கைது செய்து திருவண்ணாமலையில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இதில் 123 பெண்கள் உள்பட 177 பேர் கைது செய்யப்பட்டனர்.

Next Story
×
X