என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
செய்திகள்
![ஆரல்வாய்மொழியில் சாலை பணி பாதியில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதை படத்தில் காணலாம். ஆரல்வாய்மொழியில் சாலை பணி பாதியில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.](https://img.maalaimalar.com/Articles/2021/Feb/202102071639134779_Tamil_News_Tamil-news-Aralvaimozhi-near-Complaint-of-noncompliance_SECVPF.gif)
X
ஆரல்வாய்மொழியில் சாலை பணி பாதியில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.
தரமற்ற முறையில் நடைபெறுவதாக புகார்: சாலை பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்
By
மாலை மலர்7 Feb 2021 4:39 PM IST (Updated: 7 Feb 2021 4:39 PM IST)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
ஆரல்வாய்மொழி அருகே தரமற்ற முறையில் நடைபெறுவதாக கூறி சாலை பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆரல்வாய்மொழி:
ஆரல்வாய்மொழியில் இருந்து பெருமாள்புரம் வழியாக தேவசகாயம் மவுண்டுக்கு ஒரு சாலை செல்கிறது. இந்த சாலையின் பெரும்பகுதியில் அலங்கார தரை கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ெரயில்வே பாலம் பகுதி மட்டும் சீரமைக்கப்படாமல் இருந்தது.
அந்த இடத்தில் சிமெண்டு தளம் போடுவதற்காக ஆரல்வாய்மொழி பேரூராட்சி பொது நிதியில் இருந்து ரூ.5 லட்சத்து 70 ஆயிரம் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் சாலை பணி தொடங்கியது. அப்போது சாலையில் ஏற்கனவே கிடந்த கழிவு மண்ணை அகற்றாமலும், கலவை சரியில்லாமலும் தரமற்ற முறையில் பணிகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்தநிலையில், நேற்று பணிகள் நடந்து கொண்டிருந்த போது தேவசகாயம் மவுண்ட் பங்கு பேரவை துணைத்தலைவர் மிக்கேல், செயலாளர் மைக்கேல், பொருளாளர் பென்சிகர், நாடார் மகாஜன சங்கத் தலைவர் சண்முகம் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் பழைய கழிவுமண்ணை அகற்றி, தரமான முறையில் சாலை பணி செய்யும்படி கூறினர். அத்துடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்னிலையில் பணியை மேற்கொள்ளுங்கள் என கூறி தடுத்து நிறுத்தினர். இதனால் சாலை பணி பாதியில் நிறுத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
×
X