என் மலர்
செய்திகள்
X
நீடாமங்கலம் அருகே கோரையாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி தீவிரம்
Byமாலை மலர்29 Jun 2021 3:39 PM IST
திருவாரூர் மாவட்ட நிர்வாகமும் பாலம் கட்ட பாரத பிரதமரின் கிராமப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 21 லட்சத்து 50 ஆயிரம் ஒதுக்கீடு செய்தது.
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் கண்ணம்பாடி என்ற இடத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் அகலம் குறைவாக இருந்ததால் இருசக்கர வாகனங்கள், கார், ஆட்டோ மட்டுமே சென்று வந்தது.
தற்போது இந்த பாலம் பழுதடைந்ததாலும், வாகன போக்குவரத்து அதிகரிப்பு காரணத்தாலும் புதிய பாலம் கட்ட கடந்த ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. திருவாரூர் மாவட்ட நிர்வாகமும் பாலம் கட்ட பாரத பிரதமரின் கிராமப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 21 லட்சத்து 50 ஆயிரம் ஒதுக்கீடு செய்தது. இதை தொடர்ந்து பழைய பாலத்தின் அருகே புதிய பாலம் கட்டும் பணி தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஆற்றில் தண்ணீர் வருவதற்குள் பில்லர்கள் மேலே எழுப்பப்பட்டு விட்டதால் தற்போது கோரையாற்றில் தண்ணீர் செல்லும் போதே பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. மீதமுள்ள பணிகளை முடித்து பாலத்தை போக்குவரத்திற்கு திறந்து விட்டால் கண்ணம்பாடி, பெரம்பூர், முல்லைவாசல், ரிஷியூர், மேலாளவத்தசேரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்தவர்கள் பயனடைவார்கள்.
புதிய பாலம் கட்டப்பட்டால் ஆம்புலன்ஸ், வேன், போன்ற வாகனங்கள் எளிதில் நீடாமங்கலம் மற்றும் மன்னார்குடி, கும்பகோணம், தஞ்சாவூர் என பல்வேறு ஊர்களுக்கு சென்று வரலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அருகிலுள்ள கிராமங்களுக்கான சாலைகள் அகலமான தார்ச்சாலைகளாக மேம்படுத்தப்பட்டால் பஸ்கள் இயக்கவும் வாய்ப்புள்ளது என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

Next Story
×
X