என் மலர்
செய்திகள்
X
கொரோனா தடுப்பூசி முகாம்
Byமாலை மலர்8 Aug 2021 6:34 PM IST (Updated: 8 Aug 2021 6:34 PM IST)
தமிழகத்தில் கொரோனா 3-வது அலை தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
கீழக்கரை:
தமிழகத்தில் கொரோனா 3-வது அலை தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கீழக்கரை புதுத்தெருவில் உள்ள நூரானியா நர்சரி பள்ளியில் இலவச கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் 243 நபர்கள் தடுப்பூசி செலுத்திகொண்டனர். சயீது தலைமையில் வட்டார மருத்துவர் ராசிக்தீன், அனைத்து ஜமாத் கூட்டமைப்பு செயலாளர் ஷேக் ஹுசைன், மைபா சீனி அப்துல் காதர், ஹாரிஸ், தெற்குத்தெரு ஜமாத் துணைத் தலைவர் பவுசுல் அலியுர் ரகுமான், நூரானியா பள்ளியின் துணை முதல்வர் ரிஸ்வி மற்றும் ஆசிரியைகள், அக்ஸா பள்ளி இமாம் ரபீக் ஆகியோர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை மைபா இளைஞர்கள் குழு செய்திருந்தனர்.முடிவில் நூரானியா நர்சரி பள்ளியின் மேலாளர் சுபைர் நன்றி கூறினார்.
Next Story
×
X