என் மலர்
செய்திகள்
X
ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் சீல் வைக்கப்பட்ட 150 கடைகள் திறப்பு
Byமாலை மலர்4 Sept 2021 11:17 AM IST (Updated: 4 Sept 2021 11:17 AM IST)
ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் கடைகள் திறந்த தகவல் அறிந்ததும் இன்று காலை முதல் கூட்டம் அதிகமாக இருந்தது
ஊட்டி:
ஊட்டி நகராட்சி மார்க்கெட்டின் உள் மற்றும் வெளிப்புற வணிக வளாகங்களில் மொத்தம் 1,587 கடைகள் உள்ளது.
இங்கு வாடகை செலுத்தாத 750 கடைகளுக்கு கடந்த மாதம் 25-ந் தேதி நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். கடந்த 9 நாட்களுக்கும் மேலாக அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தது.
கடைகளுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற கோரி வியாபாரிகள் தொடர் போராட்டம் மற்றும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே நிலுவை வாடகையை வியாபாரிகள் செலுத்தி வருகின்றனர். வாடகை செலுத்திய வியாபாரிகளின் கடைகளுக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குறைந்த வாடகை பாக்கி உள்ள கடைகளை திறந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.
இதையடுத்து ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் கடை நடத்தி வந்த வியாபாரிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு நேற்று முதல் கடைகளை திறந்தனர். மொத்தமுள்ள 1587 கடைகளில் தற்போது வரை 719 கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
இதில் சீல் வைக்கப்பட்ட 150 கடைகளும் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்றது. மார்க்கெட்டில் கடைகள் திறந்த தகவல் அறிந்ததும் இன்று காலை முதல் கூட்டம் அதிகமாக இருந்தது. மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்கள் வாங்கி சென்றனர்.

Next Story
×
X