search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    வாணவெடிகள் வெடித்து வீடுகள் சேதம்: பட்டாசு ஆலை உரிமையாளர் மீது 4 பிரிவுகளில் வழக்கு

    சாத்தான்குளம் அருகே வாணவெடிகள் வெடித்து வீடுகள் சேதமடைந்த சம்பவம் குறித்து பட்டாசு ஆலை உரிமையாளர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    சாத்தான்குளம்:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே தட்டார்மடம் அடுத்துள்ள இடைச்சிவிளை குமரன் நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(வயது 44). இவர் நெல்லை மாவட்டம் அணைக்கரை அருகே அரசு அனுமதியுடன் வாணவெடிகள் தயாரித்தல் மற்றும் சேமிப்பு குடோன் வைத்துள்ளார்.

    நேற்று அதிகாலை வாணவெடிகளுடன் நிறுத்தப்பட்டு இருந்த அவரது கார் திடீரென வெடித்து சிதறியது. இதில் அக்கம்பக்கத்தில் இருந்த சுமார் 37 வீடுகள் சேதம் அடைந்தன. 7 வீடுகள் பலத்த சேதம் அடைந்தது.

    மேலும் வாணவெடிகள் இருந்த கார் உருக்குலைந்தது. தகவல் அறிந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர்.

    வீடுகள் சேதம் அடைந்தது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் பேரில் பட்டாசு ஆலை உரிமையாளர் பாலகிருஷ்ணன் மீது பொது சொத்துக்களை சேதப்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதுதொடர்பாக பாலகிருஷ்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பாலகிருஷ்ணன் தனது பட்டாசு ஆலைக்கான உரிமத்தை நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் எடுத்துள்ளார். இதனால் அந்த உரிமத்தை ரத்து செய்யவும் நெல்லை மாவட்ட கலெக்டருக்கு, போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.

    Next Story
    ×