என் மலர்
செய்திகள்
X
உடுமலையில் சாலை மையதடுப்புகளில் மின்விளக்குகள் பொருத்தும் பணி தீவிரம்
Byமாலை மலர்16 Nov 2021 11:53 AM IST (Updated: 16 Nov 2021 11:53 AM IST)
மையத்தடுப்புகளில் உரிய அளவீடு மேற்கொண்டு குழிகள் தோண்டி மின் கம்பங்கள் அமைக்கும் பணி வேகமெடுத்துள்ளன.
உடுமலை:
உடுமலை நகராட்சிக்கு நூற்றாண்டு நினைவாக உட்கட்டமைப்பு மற்றும் பல்வேறு அடிப்படை வசதிகளை மேம்படுத்த சிறப்பு நிதியாக ரூ.48.87 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் ரூ.5.91 கோடி மதிப்பீட்டில் நகரின் முக்கிய சாலைகளின் மையத்தடுப்புகளில் மின் விளக்குகள் அமைக்கப்படுகின்றன.
இருபுறமும் ஒளிரும் வகையில், தெருவிளக்குகள் அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மையத்தடுப்புகளில் உரிய அளவீடு மேற்கொண்டு குழிகள் தோண்டி மின் கம்பங்கள் அமைக்கும் பணி வேகமெடுத்துள்ளன. இதற்காக பாதுகாப்புடன் மின் இணைப்பு வயர்கள் அமைக்கப்பட்டும் வருகின்றன.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
உடுமலை-பொள்ளாச்சி ரோட்டில் நகர எல்லையான மின் மயானம், பஸ் நிலையம் முதல் கொழுமம் ரோடு பிரிவு, தாராபுரம் ரோட்டில் நகர எல்லையில் இரண்டு கி.மீ., தொலைவு என நகரின் பிரதான வழித்தடங்களில் உள்ள மையத்தடுப்புகளில் மின் விளக்குகள் அமைக்கப்படுகிறது.
இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் அச்சமின்றி சாலையை கடக்க முடியும். மேலும் இரவு நேரங்களில் திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்கள் நடப்பதும் சமூக விரோத நபர்களின் நடமாட்டம் குறையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Next Story
×
X