என் மலர்
செய்திகள்
X
கோவில்பட்டியில் கோவில் உண்டியலை உடைத்து நகை-பணம் கொள்ளை
Byமாலை மலர்23 Nov 2021 4:30 PM IST (Updated: 23 Nov 2021 4:30 PM IST)
கோவில்பட்டியில் இன்று கோவில் உண்டியலை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி வடக்குதிட்டங்குளம் பகுதியில் அம்மன்கோவில் உள்ளது. அந்த கோவிலில் அம்மன் மட்டுமின்றி கருப்பசாமி, விநாயகருக்கும் தனித்தனி சன்னதி உள்ளது. வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலில் பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் செவ்வாய் கிழமையான இன்று வழக்கம் போல பூஜை நடத்துவதற்கு பூசாரி சென்றுள்ளார். அப்போது அம்மன் கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்து பார்த்து அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது 2 அம்மன் சிலை கழுத்தில் கிடந்த தாலிகள் கொள்ளை போயிருந்தது. மேலும் கோவில் முன்பு வைக்கப்பட்டிருந்த உண்டியலை மர்மநபர்கள் உடைத்து அதிலிருந்த பணத்தை எடுத்து சென்றிருப்பதும் தெரியவந்தது.
இது தொடர்பாக அவர் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுஜித்ஆனந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை பார்வையிட்டு கொள்ளையர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story
×
X