என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
கொரோனா பரிசோதனை மையத்திற்கு எதிர்ப்பு- இந்து முன்னணி போராட்டம்
Byமாலை மலர்8 Jan 2022 6:10 PM IST (Updated: 8 Jan 2022 6:10 PM IST)
பாளை காந்திமதி மேல்நிலைப்பள்ளியில் கொரோனா பரிசோதனை மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:
பாளை காந்திமதி பள்ளியில் இன்று கொரோனா பரிசோதனை மையம் திறக்கப்பட்டது. இதை அறிந்த இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன், மாவட்ட பொதுச்செயலாளர் பிரம்மநாயகம் மற்றும் நிர்வாகிகள் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா மையம் பகுதியில் தரையில் அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் அதிகாரிகள் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான காந்திமதி மேல்நிலைப் பள்ளியில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இங்குள்ள மாணவிகளை அருகில் உள்ள வேறு சமுதாய பள்ளிக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.
மாநகராட்சி பகுதியில் பல்வேறு பள்ளிகள் உள்ள நிலையில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான பள்ளியை தேர்ந்தெடுத்தது ஏன்?
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அவர்களுக்கு ஆதரவாக பா.ஜ.க. நிர்வாகிகளும் போராட் டத்தில் கலந்து கொண்டனர். அவர்களுடன் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
X