search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வேலூர் மாநகராட்சியில் கவுன்சிலர் சீட் பெற கடும் போட்டி

    வேலூர் மாநகராட்சியில் கவுன்சிலர் சீட் பெற கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் வேலூர் மாநகராட்சி குடியாத்தம், பேரணாம்பட்டு நகராட்சிகள் மற்றும் ஒடுகத்தூர், பள்ளிகொண்டா, திருவலம், பென்னாத்தூர் ஆகிய பேரூராட்சிகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. வேலூர் மாநகராட்சி மேயர் பதவி (பொது) பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு தி.மு.க& அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க. கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் நேர்காணல் நடந்தது.

    வேலூர் மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட முன்னாள் கவுன்சிலர்கள் பலர் சீட் கேட்டுள்ளனர். இதில் சில வார்டுகள் பெண்கள் வாடாக மாறி உள்ளது.இதனால் முன்னாள் கவுன்சிலர்கள் அவர்களது மனைவிகளை வேட்பாளராக நிறுத்தவும் முனைப்பு காட்டி வருகின்றனர்.

    வேட்பாளர் தேர்வு நேர்காணல் நடந்தபோது வேட்பாளர்களிடம் எவ்வளவு பணம் செலவழிப்பீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது.

    அப்போது பலர் ரூ.75 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை செலவழிக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். அனைவருமே பணம் அதிக அளவில் செலவழிக்க தயாராக இருப்பதாக கூறி உள்ளதால் கவுன்சிலர் சீட்டுக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

    இதனால் சில வார்டுகளில் யாருக்கு சீட் கொடுப்பது என்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.
    Next Story
    ×