என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
நாகர்கோவில் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் நகைத்தொழிலாளி பலி
Byமாலை மலர்20 Jan 2022 4:16 PM IST (Updated: 20 Jan 2022 4:16 PM IST)
நாகர்கோவில் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் நகைத்தொழிலாளி பலியானார்.
நாகர்கோவில்:
கருங்கல் அருகே வாள்வச்சகோஷ்டம் குன்னம்பாறையை சேர்ந்த திருப்பதி ஆசாரி மகன் பத்மனாபன் (வயது 58). இவர் கருங்கலில் உள்ள நகைக்கடை ஒன்றில் நகை செய்யும் வேலை செய்து வந்தார்.
நேற்று இரவு வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக கடையில் இருந்து புறப்பட்டார். கடையை விட்டு சுமார் 10 அடி தூரம் நடப்பதற்குள் மார்த்தாண்டம் கருங்கல் ரோட்டில் அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பத்மனாபன் பலத்த காயம் அடைந்தார்.
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்கு அங்கிருந்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக பலியானார்.
இதுகுறித்த தகவலின் பேரில் கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
X