என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
களியக்காவிளை அருகே பாதையை வழிமறித்து கிடந்த பாம்பு
Byமாலை மலர்27 Feb 2022 12:50 PM IST (Updated: 27 Feb 2022 12:50 PM IST)
களியக்காவிளை அருகே பாம்பு பாதையை வழிமறித்து கிடந்தது.
களியக்காவிளை:
களியக்காவிளை அருகே திருத்துவபுரம் வடக்கு வெள்ளச்சிமாவிளை பகுதியை சேர்ந்தவர் சதீஷ். கூலி தொழிலாளி. இவர் வேலைக்கு செல்வதற்காக வீட்டின் வெளியே வந்தார்.
அப்போது பாதையை வழிமறித்து பாம்பு ஒன்று கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அந்த இடத்திற்கு ஓடி வந்தனர்.
மேலும் அவர்கள் களியல் வனச்சரக அலுவலத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விஜயகுமார் தலைமையில் வனத்துறையினர் அங்கு விரைந்து வந்தனர்.
வனத்துறையினர் வருவதற்குள் பாம்பு மெல்ல மெல்ல ஊர்ந்து பாறை இடுக்குக்குள் சென்று விட்டது. பாறை இடுக்குக்குள் சென்ற பாம்பை வனத்துறையினர் 2 மணி நேரம் போராடி பிடித்து சென்றனர்.இதையடுத்து அந்த பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.
Next Story
×
X