search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தா.பேட்டை சிவாலயத்தில் உள்ள ஜெஸ்டர் கோமாளி மற்றம் அன்னப்பறவை சிற்பங்களை படத்தில் காணலாம்.
    X
    தா.பேட்டை சிவாலயத்தில் உள்ள ஜெஸ்டர் கோமாளி மற்றம் அன்னப்பறவை சிற்பங்களை படத்தில் காணலாம்.

    திருச்சி அருகே பழங்கால சிற்பம் கண்டுபிடிப்பு

    திருச்சி அருகே காசி விஸ்வநாதர் கோவிலில் பழங்கால ஜெஸ்டர் கோமாளிகள் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    திருச்சி:

    திருச்சி மாவட்டம் தா.பேட்டையில் மிகவும் பழமையான காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கல்வெட்டு மற்றும் தொல்லியல்துறை ஆய்வாளர் பேராசிரியர் பாபு கள ஆய்வு மேற்கொண்டார். 

    இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: 

    திருச்சி மாவட்டம், தா. பேட்டை சிவாலயம் நாயக்கர் காலத்தை ஒத்துள்ளது. இன்றும் இவ்வூரின் பல பகுதிகளில் தொன்மைச் சான்றுகளாக சமணம், பௌத்த சமயம் தொடர்பான தடயங்கள் காணக்கிடைக்கின்றன. தா.பேட்டைகாசி விஸ்வநாதர் சிவாலயத்தில் பல கலைநயம் மிக்க சிற்பங்கள் காணப்படுகிறது. 

    தூண்களில் சிற்பங்கள், பறவைகள், விலங்குககள் சிற்பங்களும் நேர்த்தியாக புடைப்பு   சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளது.  தற்போது இங்கு கோவில் கருவறை சுற்றுப் பிரகார நடை பாதையில் ஓரு அதிசய சிற்பம் கண்டறியப்பட்டது. இது ஜெஸ்டர் எனப்படும் பழமையான கோமாளி சிற்பமாகும். 

    சிற்ப அமைப்பில் தலையில் அயல்நாட்டு கோமாளிகள் அணிந்திருக்கும் வகையான தொப்பியும், கை, கால்களில் காப்பு மற்றும் மார்பில் ஆபரணம் அணிந்த நிலையில், இரு கைகளையும் உயர்த்திய நிலையில் குதித்தவாறு சிரித்தபடி இருக்கும். இந்த புடைப்புச்சிற்பம்     அயல்நாட்டை சேர்ந்த ஒரு கோமாளியின் சிற்பமாகும். 

    ஒரு கோமாளிக்கு கோவிலில் முக்கியத்துவம் அளிக்க வேண்டிய அவசியம் குறித்து ஆராய்ந்தால் பல வரலாற்று உண்மைகள் நமக்கு தெரிய வருகின்றன. கி.பி 14&ம் நூற்றாண்டில் ஜெஸ்டர் எனப்படும் கோமாளிகள் எகிப்து அரசர்களின் அவையில் முக்கியத்துவம் பெற்றிருந்தனர். இவர்களது பணி அரசர்களையும், மக்களையும் தங்களுடைய வேடிக்கை நிகழ்ச்சிகளால் மகிழ்விப்பதாகும். 

    இவர்கள் உலகின் பல நாடுகளிலும் தங்ளது கலைப்பணியை செய்து வந்ததை வரலாற்றுச்சான்றுகள் கூறுகின்றன. அதுபோல் இந்தியாவிலும் நம் தமிழகத்தின் பல கோவில் தூண்களிலும் இத்தகைய ஜெஸ்டர் கோமாளி சிற்பம் இருப்பதை காணலாம். மேலும் நம் தமிழ் மன்னர்கள் கலைகளை வளர்க்கும் விதமாக கலைஞர்களுக்கு நிலங்களையும் தானமாக கொடுத்துள்ளனர். 

    அந்த வகையில் தா.பேட்டை சிவாலயத்தில் காணப்படும் ஜெஸ்டர் சிற்பம் முற்காலத்தில் இங்கு வாழ்ந்த மக்களுக்கும் அயல் நாட்டினருக்கும் தொடர்புகள் இருந்திருக்கலாம் என் பதை காட்டும் விதமாக உள்ளது. தமிழத்தின் பெரும்பான் மையான கோவில்களில் கோமாளி  சிற்பங்கள் தற்காலத்திய  ஜோக்கர் வடிவத்தை சிற்பங்களாக வடிவமைத்து இருப்பதை காணலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×