என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
மீஞ்சூர் அருகே வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் கைது
Byமாலை மலர்8 March 2022 1:02 PM IST (Updated: 8 March 2022 1:02 PM IST)
மீஞ்சூர் அருகே வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி:
மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டை சேர்ந்தவர் சரவணன். அதே பகுதியில் காய்கறி கடை நடத்தி வருகிறார்.
இவர் ரெயில் நிலையம் அருகில் நடந்து வந்து கொண்டிருந்த போது வாலிபர் ஒருவர் சரவணனிடம் அவசரமாக போன் பேச வேண்டும் என்று கூறி செல்போனை கேட்டார்.
ஆனால் சரவணன் செல்போனை கொடுக்க மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி சரவணனிடம் இருந்த செல்போனை பறித்து தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்து சரவணன் மீஞ்சூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சப்-இன்ஸ்பெக்டர் சைமன் மற்றும் போலீசார் விரைந்து வந்து செல்போனை பறித்து தப்பிய அத்திப்பட்டை சேர்ந்த அய்யப்பன் (23) என்பவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
Next Story
×
X