search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

    மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவத்தில் போலீசார் விசாரணை
    திருச்சி :

    திருச்சி மாவட்டம் துறையூரில் இருந்து பெரம்பலூர் செல்லும் சாலையில் தனியார் திருமண மண்டபம் ஒன்று உள்ளது. இதில்  நடைபெற இருக்கும் திருமணம் ஒன்றிற்கு மணவறை அலங்காரம் செய்வதற்காக ஒரு குழுவினர் வந்துள்ளனர்.

    அதில் திருவானைகோவில் அக்ரஹாரம் தெருவைச் சேர்ந்த சரத் (வயது 24) என்பவரும் வந்துள்ளார். இந்நிலையில் மணவறை அலங்காரம் செய்வதற்காக எடுத்து வரப்பட்ட சுமார் 20 நீளம் உள்ள இரும்பு கம்பி ஒன்றினை திருமண மண்டபத்திற்கு உள்ளே எடுத்துச் செல்ல முயன்ற பொழுது,

    இரும்புக் கம்பி எதிர்பாராத விதமாக மேலே சென்ற உயர் அழுத்த மின் கம்பியின் மீது உரசியது. இதனால் மின்சாரம் தாக்கப்பட்ட சரத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இச்சம்பவம் தொடர்பாக கிடைத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற துறையூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    Next Story
    ×