என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
Byமாலை மலர்8 March 2022 2:51 PM IST (Updated: 8 March 2022 2:51 PM IST)
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்களுக்கு வலை
திருச்சி:
திருச்சி சத்திரம் சுந்தரம்பிள்ளை ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன். இவர் வெளிநாட்டில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரேவதி (30).
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரேவதி, துறையூர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார்.
நேற்றைய தினம் வீட்டிற்கு வந்து பார்த்தபோது முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த தங்க மூக்குத்தி ரூ.2000 பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது.
பின்னர் இதுகுறித்து ரேவதி கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
X