என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
அவசர அழைப்புக்கு நடவடிக்கை எடுப்பதில் கோவை மாநகர போலீசார் மாநில அளவில் முதலிடம்
Byமாலை மலர்8 March 2022 3:27 PM IST (Updated: 8 March 2022 3:27 PM IST)
ஜனவரி மாத ஆய்வின்படி, அவசர அழைப்புக்கு உடனடி நடவடிக்கை எடுப்பதில், தமிழக அளவில் கோவை மாநகர போலீசார் முதலிடத்தில் உள்ளனர்.
கோவை,
சட்டம் ஒழுங்கு, குற்றச் சம்பவங்கள், போக்குவரத்து சார்ந்த புகார்கள் தொடர்பாக போலீசாரின் அவசர தொலைபேசி எண்ணான 100&யை பொதுமக்கள் தொடர்பு கொண்டு தெரிவிக்கின்றனர்.
இந்த புகார்கள் பெருநகர சென்னை காவல்துறையின் நவீன கட்டுப்பாட்டு அறையில் பெறப்பட்டு, உடனடியாக தொடர்புடைய மாவட்ட அல்லது மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கப்படுகிறது. பின்னர் போலீசாருக்கு தெரி விக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதில் கோவை மாநகர போலீஸ் முதலிடம் பிடித்துள்ளது.
இதுகுறித்து மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப் குமார் கூறியதாவது:& கோவை மாநகரில் 15 சட்டம் ஒழுங்கு போலீஸ் நிலையங்கள் உள்ளன. 24 ரோந்து வாகனங்களும் உள்ளது. சரவணம்பட்டி, பீளமேடு, சிங்காநல்லூர் போன்ற எல்லைப்பரப்பு அதிகம் உள்ள, குற்றச் சம்பவங்கள் அதிகம் நடக்கும் பகுதிகளில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட ரோந்து வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மற்ற இடங்களில் தலா ஒரு ரோந்து வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறது. மாநகர போலீஸ் கட்டுப் பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தவுடன், ரோந்து வாகனங்களுக்கு தகவல் தெரிவிக்கப் படுகிறது. அவர்கள் தகவல் வந்த இடத்துக்கு சென்று விசாரிக் கின்றனர். இதுதொடர்பாக மாதந்தோறும் ஆய்வு செய்யப் படுகிறது.
கடந்த ஜனவரி மாத ஆய்வின்படி, அவசர அழைப் புக்கு உடனடி நடவடிக்கை எடுப்பதில், தமிழக அளவில் கோவை மாநகர போலீசார் முதலிடத்தில் உள்ளனர். தகவல் கிடைத்த 2 நிமிடம் 59 விநாடிகளுக்குள் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு போலீசார் சென்று விசாரிக்கின்றனர். 2-&வது இடத்தில் கரூர் மாவட்ட கபோலீசாரும் (3 நிமிடம் 12 விநாடி), 3-&வது இடத்தில் தூத்துக்குடி மாவட்ட போலீசாரும் (3 நிமிடம் 17 விநாடி) உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
X