search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சியில் தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கிவைத்து, வேலை செய்பவர்களுக்
    X
    திருச்சியில் தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கிவைத்து, வேலை செய்பவர்களுக்

    நகர்ப்புறங்களிலும் 100 நாள் வேலை திட்டத்தை விரிவுபடுத்த கோரிக்கை

    தமிழகத்தில் நகர்ப்புறங்களிலும் 100 நாள் வேலை திட்டத்தை விரிவுபடுத்த மத்திய அரசை வலியுறுத்தி வருவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
    திருச்சி:

    திருச்சி மாநகராட்சி, அபிஷேகபுரம் கோட்டம் 8&வது வார்டு குழுமணி சாலையில் உள்ள குடியிருப்புப்பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.  

    நகர்ப்புற வளர்ச்சித்துறை  அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்து பேசியதாவது:-

    மத்திய  அரசு  100  நாள் வேலை வாய்ப்புத் திட்டத்திற்கு கிராமங்களுக்கு மட்டும் ரூ.14 ஆயிரம் கோடி நிதி ஒதுக்குகிறார்கள். நகர்ப்புறங்களுக்கு அந்த நிதியை தருவதில்லை.

    இந்தநிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நகர்ப்புற நகர்ப்புற வேலைவாய்ப்புத்     திட்டத்தை கொண்டு வந்து தற்போது முதற்கட்டமாக ரூ.100 கோடி நிதியை  ஒதுக்கி  உள்ளார். அதில் மாநகராட்சிகளில் ஒரு மண்டலத்தையும், பேரூராட்சிகளில் 27 பேரூராட்சிகளையும்,  நகராட்சிகளில்  நான்கைந்து நகராட்சிகளும் சேர்க்கப்பட்டிருக்கிறது.

    நிதி நிலைமைக்கு ஏற்ப இந்த திட்டத்தை விரிவுபடுத்த கோரிக்கை விடுக்க இருக்கிறேன். இந்த பகுதி மழைக்காலத்தில் மிகவும் மோசமாக  இருந்தது. படிப்படியாக முன்னேற்றப்பாதைக்கு  அழைத்துச் செல்ல திட்டங்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் உள்ள மக்கள் தொகையில் 63 சதவீத மக்கள் நகர்ப்புறங்களில் வசிக்கிறார் கள். ஆனால் இந்தியாவின் பிற மாநிலங்களில் 36 சதவீத மக்கள் மட்டுமே நகர்ப்புறங்களில் இருக்கிறார்கள். 

    ஆகவே 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் அங்குள்ள பெரும்பாலான மக்களுக்குக்   கிடைக்கிறது. இதனை நகர்ப்புறங்களில் விரிவுபடுத்தவும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறோம் என்றார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:

    கிராமங்களுக்கு தண்ணீர் வழங்கும் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தை நகர்ப்புறங்களிலும் விரிவுபடுத்த அந்த துறை அமைச்சருக்கு வலியுறுத்துகிறோம். அவரும் நிதி ஒதுக்குவதாக கூறியிருக்கிறார்.

    தமிழகத்தில் விலைவாசி உயர்ந்து வருவதாக கூறும் பா.ஜ.க.வினர் அவர்கள் ஆளும் மாநிலங்களில் தண்ணீர், மின்சார வரி, பெட்ரோல் வரி உயர்த்தப்பட்டதை அறிந்தும் தமிழக அரசை குற்றம் சாட்டுவது நியாயமா? என்றார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் சு.சிவராச, மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், முசிறி சட்டமன்ற உறுப்பினர் தியாகராஜன், மாநகராட்சி ஆணையர்  முஜிபுர்ரகுமான், மத்திய மாவட்ட    பொறுப்பாளர் க.வைரமணி, மாமன்ற உறுப்பினர்  என்.பங்கஜம், மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×