என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
சிவாலயங்களில் பங்குனி உத்திர தீர்த்தவாரி பெருவிழா
Byமாலை மலர்8 March 2022 3:44 PM IST (Updated: 8 March 2022 3:44 PM IST)
கும்பகோணம் பகுதி சிவாலயங்களில் பங்குனி உத்திர தீர்த்தவாரி பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
பட்டீஸ்வரம்:
கும்பகோணம் மகாமகக் குளத்தில் வருகிற 18-ந் தேதி பங்குனி உத்திர தீர்த்தவாரி விழா நடைபெற உள்ளது.
இவ்விழாவில் தீர்த்தவாரி கண்டருளும் குடந்தை கீழ்கோட்டம் பிரஹன்நாயகி சமேத நாகேஸ்வரர், ஆனந்தநிதியம்பிகை சமேத ஆதிகம்பட்ட விஸ்வநாதர், கொட்டையூர் ஸ்ரீபந்தாடுநாயகி சமேத கோடீஸ்வரர் ஆகிய கோவில்களில் பங்குனி உத்திர உற்சவம் நாளை காலை 9 மணிக்கு மேல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
அதனை தொடர்ந்து நாளை முதல் தினசரி காலை மாலை இருவேளைகளில் மங்கல இன்னிசை முழங்க சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலா திருகாட்சியும் நடைபெற உள்ளது.
7-ம் திருநாளான 15-ந் தேதி மாலை திருக்கல்யாண உற்சவமும், 9&ம் திருநாளான 17-ந் தேதி காலை 8 மணிக்கு மேல் தேரோட்டமும், 10-ம் திருநாளான 18- ந் தேதி நண்பகல் 12 மணிக்கு மேல் நாகேஸ்வரர்,
ஆதிகம்பட்ட விஸ்வநாதர் ஆகிய சிவாலயத்திலிருந்து சிறப்பு அலங்காரத்தில் பஞ்ச மூர்த்திகள் மகாமககுளக் கரையில் எழுந்தருளஅஸ்திர தேவருக்கு தீர்த்தவாரியும், கொட்டையூர்-கோடீஸ்வரர் கோவிலின் தீர்த்தவாரி காலை 9 மணிக்கு மேல் காவிரி ஆற்றுக் கரையிலும் நடைபெறவுள்ளது.
ஆதிகும்பேஸ்வரர் கோவில் தெப்போற்சவம் பங்குனி உத்திர தீர்த்தவாரி தினத்தன்று மாலை 6 மணிக்கு மேல் மகாமக குளத்தில் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் எழுந்தருள் பாலிக்கும் மலையரசியான மந்திரபீடேஸ்வரி மங்களாம்பிகை, கலையரசி, அலையரசி கவரிவீச சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள சிறப்பு மங்கல இன்னிசை முழங்க, வண்ண மின் விளக்குகள் ஒளிர தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது.
இவ்விழாக்களின் சிறப்பு ஏற்பாடுகளை உதவி ஆணையர்கள் இளைய ராஜா, ஜூவானந்தம் கோவில் கண்காணிப்பாளர் சுதா, ஆய்வாளர் ராஜகுரு, செயல் அலுவலர்கள் கிருஷ்ணகுமார், ஆசைதம்பி, கணேஷ்குமார், கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Next Story
×
X