என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
களக்காடு அருகே இளம்பெண் மாயம்
Byமாலை மலர்8 March 2022 3:59 PM IST (Updated: 8 March 2022 3:59 PM IST)
களக்காடு அருகே மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள கீழதேவநல்லூர் நடுத்தெருவை சேர்ந்தவர் நம்பி. டிரைவர். இவரது மகள் புவனேஷ்வரி (வயது18)
களக்காட்டில் உள்ள துணிக்கடையில் வேலை பார்த்து வந்தார். இதையொட்டி தினசரி காலை 8.30 மணிக்கு வீட்டில் இருந்து வேலைக்கு செல்லும் புவனேஷ்வரி இரவு 9 மணிக்கு வீட்டிற்கு திரும்புவது வழக்கம்.
கடந்த 5-ந்தேதி காலை வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த நம்பி களக்காட்டிற்கு சென்று அவர் வேலை பார்த்து வந்த துணிக்கடையில் விசாரித்த போது 5-ந்தேதி மதியமே அவர் சென்று விட்டதாக தெரிவித்தனர்.
இதுபற்றி நம்பி களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான புவனேஷ்வரியை தேடி வருகின்றனர்.
Next Story
×
X