என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
குன்றத்தூரில் கடை பூட்டை உடைத்து கொள்ளை
Byமாலை மலர்8 March 2022 4:03 PM IST (Updated: 8 March 2022 4:03 PM IST)
குன்றத்தூரில் கடை பூட்டை உடைத்து விலை உயர்ந்த 35 செல்போன்கள், டி.வி.யை கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பூந்தமல்லி:
குன்றத்தூர் மீன் மார்க்கெட் அருகில் தனியாருக்கு சொந்தமான பிரபல ஷோ ரூம் உள்ளது. இதில் வீட்டு உபயோக பொருட்கள், செல்போன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்று காலை கடையை திறக்க ஊழியர்கள் வந்தபோது ஷட்டர் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது. மர்ம கும்பல் விலை உயர்ந்த 35 செல்போன்கள், டி.வி.யை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து குன்றத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
X