என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
கோவை மருதமலை முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
Byமாலை மலர்8 March 2022 4:10 PM IST (Updated: 8 March 2022 4:10 PM IST)
கோவை வடவள்ளி அருகே மருதமலையில் பக்தர்களால் ஏழாம் படை வீடு என்று அழைக்கப்படும் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.
வடவள்ளி:
கோவை வடவள்ளி அருகே மருதமலையில் பக்தர்களால் ஏழாம் படை வீடு என்று அழைக்கப்படும் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு அனைத்து நாட்களிலும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வார்கள்.
இன்று கிருத்திகை மற்றும் கந்தசஷ்டி மற்றும் செவ்வாய்க்கிழமை என்பதால் காலை முதலே பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது. கோவை, பொள்ளாச்சி உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும், கார், மோட்டார் சைக்கிள் மற்றும் பஸ்கள் மூலம் கோவிலுக்கு பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். சுப்பிரமணிய சுவாமி ல் வள்ளி தெய்வானையுடன் முன் மண்டபத்தில் தங்க மயில் வாகனத்தில் அலங்கரிக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்காக வைக்கப்பட்டு இருந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பி சென்றனர்.
மதியம் 12 மணிக்கு தங்கத்தேர் திருவீதி உலா நடந்தது. இதிலும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.இதன் காரணமாக மருதமலை அடிவார பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நீண்ட வரிசையில் அடிவாரப் பகுதிகள் ஒரு மணி நேரத்துக்கும் மேல் காத்திருந்து மலைக் கோவிலுக்கு சென்றனர்.
Next Story
×
X