என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
6 இடங்களில் மக்கள் நீதிமன்றம்
Byமாலை மலர்8 March 2022 4:11 PM IST (Updated: 8 March 2022 4:11 PM IST)
ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகிற 12-ந் தேதி 6 இடங்களில் மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ராமநாதபுரம் மாவட் டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி, திருவாடானை, ராமேசுவரம் ஆகிய 6 இடங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது.
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான சண்முகசுந்தரம் தொடங்கி வைக்கிறார்.
இது நடப்பாண்டின் முதலாவது மக்கள் நீதிமன்றம் என்பதால் வழக்குகளுக்கு செலுத்தப்படும் நீதிமன்ற கட்டணம் திரும்ப செலுத் தப்படும். மேலும் மனுதாரர் உள்ளிட்ட இரு தரப்பினருக்கும் வெற்றியாக அமையும் வகையில் வழக்குகளுக்கு தீர்வு காணப்படும்.
மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு காணப்பட்ட பிறகு மேல்முறையீடு ஏதும் செய்யமுடியாது. எனவே பணவிரயம், கால விரயம் மற்றும் மன உளைச்சல் மிச்சமாகும்.
வங்கிகளில் உள்ள வாராக்கடன் வழக்குகள், தொழிலாளா¢ இழப்பீடு, குடும்ப நல வழக்குகள், சொத்து வழக்குகள் ஆகியவைகள் குறித்து விசாரிக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
X