என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை
Byமாலை மலர்8 March 2022 4:14 PM IST (Updated: 8 March 2022 4:14 PM IST)
ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பேரூராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தருமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பேரூராட்சியில் 15வார்டுகள் உள்ளன. 15ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு அவசர சிகிச்சைக்கு அரசு மருத்துவமனை கிடையாது. இங்கு மருத்துவமனை இல்லாததால் கமுதி அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
கமுதி அரசு மருத்துவ மனைக்கு செல்லும் வழியில் சிலர் மரணம் அடைந்து விடுகிறார்கள். மேலும் இங்கு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு அரசு வழங்கும் 7.5இடஒதுக்கீடு மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பிற்கான ஒதுக்கீடு எந்த மாணவ-மாணவிகளுக்கும் கிடைக்க வாய்ப்பு இல்லை.
மேலும் அரசு வழங்கும் முழு கட்டணம் பெறுவதற்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆகையால் அபிராமம் பேரூராட்சியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளியாக மாற்றவேண்டும்.
மேலும் இங்கு சாக்கடை கழிவுநீர் அனைத்து வாறுகால்களிலும் தேங்கி கிடக்கின்றன. அவற்றை முறையான வழிவகை செய்து நோய்நொடி வராமல் சுகாதாரத்தை மேம்படுத்த வழிவகை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
Next Story
×
X