என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
மினி லாரியில் கடத்திய 1,500 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்- டிரைவர் கைது
Byமாலை மலர்7 April 2022 12:52 PM IST (Updated: 7 April 2022 12:52 PM IST)
பள்ளிப்பட்டில் மினி லாரியில் கடத்திய 1,500 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் டிரைவரை கைது செய்தனர்.
திருவள்ளூர்:
ஆர்.கே.பேட்டை வழியாக ரேசன் அரிசி கடத்தப்படுவதாக திருவள்ளூரில் உள்ள குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசாருக்கு புகார்கள் வந்தது.
இதையடுத்து குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் நந்தினிஉஷா மற்றும் போலீசார் ஆர்.கே.பேட்டை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அம்மையார் குப்பத்தில் இருந்து ஆந்திரா நோக்கி சென்ற மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மூட்டை, மூட்டையாக ரேசன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் 1,500 கிலோ ரேசன் அரிசி மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் ரேசன் அரிசி கடத்தி வந்த டிரைவரான பள்ளிப்பட்டு அடுத்த பூச்சாலியூர், மாங்காளிபுரம் பகுதியை சேர்ந்த சம்பத் என்பவரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசியை திருத்தணி நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

Next Story
×
X