என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
வாலிபர் தற்கொலை
Byமாலை மலர்7 April 2022 2:03 PM IST (Updated: 7 April 2022 2:03 PM IST)
திருமங்கலத்தில் வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவரது மகன் சிவகணேசன் (வயது28). இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கண்பார்வை குறைபாட்டிற்கு சிகிச்சை பெற்றிருந்தார். ஆனால் குணமாகாமல் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிவகணேசன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலைக்கு சென்றிருந்த அவரது தந்தை முத்துகிருஷ்ணன் வந்து பார்த்தபோது மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்த திருமங்கலம் நகர் போலீசார் சிவகணேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
X