search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தா.பேட்டை ஊருடையாப்பட்டியில் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட திட்ட இயக்குநர் பிச்சை ஆய்வு செய்த போது எடுத்த படம்
    X
    தா.பேட்டை ஊருடையாப்பட்டியில் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட திட்ட இயக்குநர் பிச்சை ஆய்வு செய்த போது எடுத்த படம்

    தா.பேட்டையில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு

    தா.பேட்டை ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
    திருச்சி:

    தா.பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணி-களை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைதிட்ட இயக்குநர் பிச்சை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    அப்போது முத்தம்பட்டி ஊராட்சி அழிஞ்சி குத்துப்பள்ளம் கிராமத்தில் சாம்பல்நீர் மேலாண்மை திட்டம், கழிவுநீர் வடிகால் அமைத்தல், மேட்டுப்பட்டியில் சிமெண்ட் சாலை அமைத்தல், தனிநபர் கழிவறை, தனிநபர் உறிஞ்சுகுழி, எம்.புதுப்பட்டி ஊராட்சி அட்டாளப்பட்டியில் ஒருங்கிணைந்த சுகாதாரவளாகம்,

    தும்பலம் ஊராட்சி சோளம்பட்டியில் பசுமை வீடு சிட்டிலரை ஊராட்சியில் தாதம்பட்டி மேலமேடு சாலை பலப்படுத்துதல், துலையாநத்தம் ஊராட்சியில் மெட்டல் சாலை அமைத்தல், துலையாநத்தம் அரசு ஆதி-திராவிடர் மேல்நிலைப் பள்ளி சுற்று சுவர் கட்டுதல்,

    வளையெடுப்பு  ஊராட்சியில் 15வது நிதிக்குழு மான்யம் நிதியில் 60 ஆயிரம் லிட்டர் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி,ஊருடையாப்பட்டி ஊராட்சி சாலக்காடு சாலையில் கழிவு நீர் வாய்க்கால், பிள்ளாதுறை  ஊருடையாப்பட்டி சாலை மேம்பாடு,

    ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தேசிய ஊரக வேலை அடையாள அட்டை வழங்கும் பணி ஆய்வு மற்றும் கழிவறைகள் கணக்கெடுப்பு ஆகிய பணிகளை ஆய்வு செய்து பணிகளை தரமாகவும், விரைந்து முடித்திடவும் அவர் அறிவுறுத்தினார்.

    ஆய்வின் போது ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் மனோகரன், குணசேகரன், பொறியாளர்கள் மாதவன், ஜெயசுதா,ஊராட்சி மன்ற தலைவர்கள், பணி மேற்பார்வையாளர்கள் சத்யன், முத்து, ராஜேஷ், வட்டார ஒருங்கிணைப்பாளர் வடிவேல், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.
    Next Story
    ×