search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    கோவில் விழாவுக்கு சென்ற மெக்கானிக் மர்ம சாவு

    தாரமங்கலம் அருகே கோவில் விழாவுக்கு சென்ற மெக்கானிக் மர்மமான முறையில் இறந்தார். அவரது நண்பர்கள் போதை பொருள் கொடுத்தார்களா? என விசாரணை நடத்தப்படுகிறது.
    தாரமங்கலம்,

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகில் உள்ள கருக்கல்வாடி கிராமம் கே.ஆர். பாளையம் பகுதியை சேர்ந்தவர் காளியப்பன். இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். 

     இதில் இளைய மகன் பாலமுருகன் (வயது 19) தாரமங்கலத்தில் உள்ள தனியார் மோட்டார்சைக்கிள் சோரூமில் மெக்கானிக் வேலை செய்து வந்தார்.
    இவர் நேற்று முன்தினம் இரவு மோட்டார்சைக்கிளில் தனது நண்பர்களுடன் கருக்கல்வாடியில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு சென்றார். 

    பின்னர் நள்ளிரவு பால-முருகன் வீட்டிற்கு வந்தார். வீட்டுக்கு வந்த ஒரு மணி நேரத்தில் தனக்கு கை, கால், நரம்பு இழுத்து பிடிப்ப-தாகவும், நாக்கு உளறு-வதாகவும் கூறியுள்ளார்.


    இதனால் பாலமுருகனை பெற்றோர் அருகாமையில் உள்ள  மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று பரிசோதனை செய்தனர். பின்பு அவர் மேல்சிகிச்சைக்கு கோவையில் உள்ள தனியார் மருத்துவ-மனைக்கு அழைத்து சென்றனர். 

    அங்கு பால-முருகனை பரிசோதித்த டாக்டர்கள், அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது, உயிர் பிழைக்க வாய்ப்-பில்லை. எனவே அவரை வீட்டிற்கு கொண்டு செல்லுங்கள் என கூறினர். 

    இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பாலமுருகனை மீண்டும் காரில் வீட்டிற்கு கொண்டு வந்தபோது வழியில் அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது பற்றி அவரது தாய் மஞ்சு, தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரில், நேற்று முன்தினம் திருவிழாவுக்கு போன இடத்தில் நண்பர்கள் சேர்ந்து பாலமுருகனுக்கு போதை பொருள் கொடுத்தி-ருக்கலாம் என சந்தேகிக்-கிறேன்.

    சம்பவத்தன்று இரவு நண்பர்கள் 2 பேர், பாலமுருகனை மோட்டார்சைக்கிளில் வீட்டிற்கு கொண்டு வந்து விட்டனர். அவர்கள் சென்ற ஒரு மணி நேரத்தில் எனது மகன் உடல் நலம் பாதிக்கப்பட்டு, இறந்துள்ளார். எனவே எனது மகன் சாவில் சந்தேகம் உள்ளது. போலீசார் விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும் என கூறியுள்ளார்.


    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாலமுருகனுக்கு போதை பொருள் கொடுத்தார்களா? என நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×