search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரேசன் அரிசி மூட்டைகளுடன் கைதான 2 பேர்.
    X
    ரேசன் அரிசி மூட்டைகளுடன் கைதான 2 பேர்.

    சேலத்தில் கடத்தப்பட்ட 2 டன் ரேசன் அரிசி சிக்கியது- 2 பேர் கைது

    சேலம் பொன்னம்மாப்பேட்டையில் 2 டன் கடத்தல் ரேசன் அரிசி சிக்கியது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    சேலம்,

    சேலம் பொன்னம்மாப்-பேட்டை  வாட்டர் டேங்க் பகுதியில்  இன்று அதிகாலை   ரேசன்   அரிசி   மூட்டைகளுடன் நீண்ட நேரமாக ஒரு வாகனம் நிற்பதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  
    இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் அதனை சோதனை செய்-தனர். 


    அப்போது 40  கிலோ எடை கொண்ட  50 மூட்டைகளில்   ரேசன் அரிசி இருப்பது தெரியவந்தது.   வாகனத்தில்   இருந்த  பொன்னம்மாப்பேட்டையை சேர்ந்த பிரவீன்குமார் (வயது  33), நெத்திமேட்டை சேர்ந்த சந்தோஷ்குமார் (34) ஆகிய 2 பேரை பிடித்து போலீசார்  விசாரணை நடத்தினர். 


    அப்போது ரேசன்  அரிசியை கடத்தி  வந்து மாவாக அரைக்க முயன்றதும், பின்னர் அதனை ஓட்டல்-களுக்கு சப்ளை செய்ய  முயன்றதும் தெரிய வந்தது.  இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார் 2 டன் அரிசி மற்றும் கடத்தலுக்கு  பயன்படுத்திய சரக்கு    வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×