என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
உச்சிமாகாளி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா
Byமாலை மலர்7 April 2022 3:27 PM IST (Updated: 7 April 2022 3:27 PM IST)
ஆத்திகுளம் உச்சிமாகாளி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா நடைபெற்றது.
கயத்தாறு:
கயத்தாறு அருகே உள்ள ஆத்திகுளம் கிராமத்தில் உச்சிமாகாளி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா நடைபெற்றது.
இந்த கோவிலில் கடந்த 8 தினங்களுக்கு முன்பு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அன்று முதல் தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து நேற்று சிறப்பு பூஜை, அம்மன் அம்மனுக்கு முளைப்பாரி பாடல்கள் பாடி முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.
பின்னர் பால்குடம், காதுகுத்து முடிகாணிக்கை மற்றும் அன்னதானங்கள் கோவில் தர்மகர்த்தா வேலுச்சாமி தலைமையில் நடைபெற்றன.
தொடர்ந்து இரவு பூக்குழி திருவிழா நடைபெற்றது. பின்னர் தொடர்ந்து சாமக்கொடை நடந்தது.
தொடர்ந்து அதிகாலையில் கிடாவெட்டி பொங்கலிட்டனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் தர்மகர்த்தா வேலுச்சாமி நாட்டாமை காளிராஜ், சங்கர், வெங்கட்ராமன், செல்லச்சாமி ஆகியோர் செய்திருந்தனர்.

Next Story
×
X