search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று தோல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    X
    நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று தோல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை தவிர வேறு மருந்துகளை தோலில் தடவ வேண்டாம்-நெல்லை மருத்துவ கல்லூரி டீன் ரவிச்சந்திரன் பேச்சு

    விழிப்புணர்வு கையேட்டை மருத்துவ கல்லூரி டீன் ரவிச்சந்திரன் வெளியிட்ட காட்சி.
    நெல்லை:

    இந்திய மருத்துவ சங்கம் சார்பில் ஆண்டுதோறும் ஏப்ரல் 6--ந் தேதி தோள் சுகாதார தினமாகவும், ஏப்ரல் 7-ந் தேதி உலக சுகாதார தினமாகவும் கடை-பிடிக்கப்பட்டு வருகிறது. 

    இதனையொட்டி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று தோல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் பொதுமக்கள் தோலுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது குறித்து விளக்கப்-பட்டது.இந்த நிகழ்ச்சிக்கு மருத்துவக்கல்லூரி டீன் டாக்டர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கி தோல் விழிப்புணர்வு குறித்த கையேட்டை வெளியிட்டார். 

    இதற்கு தோல் நோய் துறை தலைவர் நிர்மலா தேவி முன்னிலை வகித்தார். மருத்துவமனை கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், டாக்டர்கள் முகமது ரபி, சுந்தரம் மற்றும் பயிற்சி டாக்டர்கள் ஏராள-மானோர் கலந்து கொண்-டனர். 

    அப்போது டீன் பேசுகையில், தற்போது பொதுமக்கள் தோலினை பாதுகாப்பது என்பதில் அலட்சியம் காட்டி வருகின்றனர். 

    செயற்கையாக அழகை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக பல விதமான அழகுசாதன பொருட்களை பயன்படுத்து-கிறார்கள். 

    இது தவிர வலி நிவாரணிகள், அழகு நிலை-யங்களில் பயன்-படுத்தப்படும் வேதியல் காரணிகள் உள்ளிட்ட-வற்றாலும் தோல் பாதிக்கப்படுகிறது. 

    எனவே நாங்கள் தோல் நோயிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகிறோம். 

    துண்டு பிரசுரம் வெளியீடு, குறுஞ்செய்தி மற்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் தெரிவித்தல் உள்ளிட்டவற்றை செய்து வருகிறோம். 

    பொதுமக்கள், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை தவிர வேறு எந்த மருந்துகளையும் தோலில் தடவவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்-படுகிறார்கள் என்றார்.
    Next Story
    ×