என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
வேலூர்ஆர்.டி.ஓ. அலுவலக சாலையில் திடீர் பள்ளத்தில் சிக்கிய செங்கல் லாரி
Byமாலை மலர்7 April 2022 5:06 PM IST (Updated: 7 April 2022 5:06 PM IST)
வேலூர்ஆர்.டி.ஓ. அலுவலக சாலையில் திடீர் பள்ளத்தில் செங்கல் லாரி சிக்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரி ஆர்.டி.ஓ. ஆபிஸ் ரோட்டில் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. பரபரப்பாக காணப்படும் இந்த ரோட்டில் தற்போது தார்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
தார் சாலையில் ஈரப்பதத்துடன் காணப் படுகிறது. இந்தநிலையில் அந்த பகுதியில் காலியான இடத்தில் வீடு கட்டும் பணி நடந்து வருகிறது.
இதற்காக லாரி ஒன்று செங்கல் ஏற்றி ஆர்.டி.ஓ. ரோட்டிற்கு வந்தது. 4 முனை சந்திப்பில் லாரி வந்தபோது தார்சாலை போடப்பட்டுள்ள இடத்தில் லாரி சென்றதால் சக்கரத்தின் அழுத்தம் காரணமாக தார் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டு அதில் இறங்கியது.
இதனால் லாரியை மீட்க முடியாமல் அவதியடைந்தனர். உடனடியாக இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் போக்குவரத்து சரி செய்யப்பட்டு லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தார்சாலை மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
Next Story
×
X