என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
மதுரவாயலில் கியாஸ் சிலிண்டர் வெடித்து தம்பதி உடல் கருகினர்- ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
Byமாலை மலர்7 April 2022 7:53 PM IST (Updated: 7 April 2022 7:53 PM IST)
மதுரவாயலில் கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் தம்பதியினர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
போரூர்:
மதுரவாயல் தனலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (வயது84). இவரது மனைவி தனலட்சுமி (70).
இன்று அதிகாலை 3.30மணி அளவில் தனலட்சுமி, வெந்நீர் வைப்பதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்தார்.
அப்போது கியாஸ் கசிந்து இருந்ததால் திடீரென சிலிண்டர் வெடித்தது. இதில் தனலட்சுமி மீது தீப்பற்றியது.
அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த பாலசுப்பிரமணி, மனைவி தனலட்சுமியை காப்பாற்ற முயன்றார். இதில்அவர் மீதும் தீ பரவியது. இருவரும் தீயில் கருகி அலறி துடித்தனர்.
சத்தம்கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் உயிருக்கு போராடிய பாலசுப்பிரமணி, தனலட்சுமி ஆகிய இருவரையும் மீட்டு கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
X