search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாய்க்கால் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.
    X
    வாய்க்கால் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

    வெண்ணாறு கிளை வாய்க்கால் தூர்வாரும் பணி - கலெக்டர் ஆய்வு

    பூதலூர் தாலுகாவில் வெண்ணாறு கிளை வாய்க்கால் தூர்வாரும் பணியை கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்.
    பூதலூர்:

    பூதலூர் தாலுகாவில் நீர்வள ஆதாரத் துறையின் சார்பில் வெண்ணாறு பாசனப் பகுதியில் கிளை வாய்க்கால் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பூதலூர் தாலுகாவில் மொத்தம் 24 பணிகள் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் எந்திரங்கள் மூலம் செய்யப்பட்டு வருகின்றன.

    இந்த பணிகளை தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ்ஆலிவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

     பின்னர் விண்ணமங்கலம் பாசன வாய்க்காலில் செய்யப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டார்.தொடர்ந்து பணிகளை நல்ல முறையிலும் விவசாயிகள் குறை கூறாத அளவுக்கு செய்யுமாறு உத்தரவிட்டார். 

    ஆய்வின்போது நீர்வள ஆதார துறை உதவி செயற்பொறியாளர் மலர்விழி, பூதலூர் தாசில்தார் பிரேமா, உதவி பொறியாளர் பிரபாகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×