என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
24 கிலோ கஞ்சா பறிமுதல்
Byமாலை மலர்29 May 2022 1:38 PM IST (Updated: 29 May 2022 1:38 PM IST)
வாகன சோதனையில் 24 கிலோ கஞ்சா பறிமுதல் கைதான நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே கருமாத்தூர்- விக்கிரமங்கலம் சாலையில் கண்ணனூர் பகுதியில் செக்கானூரணி போலீசார் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 25.5 கிலோ மறைத்து வைத்து கொண்டு வந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர் கருமாத்தூர் நத்தம்பட்டி பிரிவு கருவேப்பிலை கிராமத்தை முத்து (வயது 47) என்பது தெரியவந்தது.
அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
X