search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கீழக்கரை இஸ்லாமியா தொடக்கப்பள்ளியில் கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழாவில் மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
    X
    கீழக்கரை இஸ்லாமியா தொடக்கப்பள்ளியில் கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழாவில் மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    இஸ்லாமியா தொடக்கப்பள்ளியில் கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழா

    இஸ்லாமியா தொடக்கப்பள்ளியில் கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழா நடந்தது.
    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இஸ்லாமியா தொடக்கப்பள்ளியில் கற்க, கசடற கல்வி அறக்கட்டளை மற்றும் வி டீம் சமூக சேவை அமைப்பு சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ மாணவிகளுக்கான இலவச கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழா நடந்தது.

    இஸ்லாமியா கல்வி நிறுவனங்களில் தாளாளர் எம்.எம்.கே. முஹைதீன் இபுராஹிம் தலைமை வகித்தார். கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி முதல்வர் சுமையா ஷேக் தாவூத், திருப்புல்லாணி வட்டார கல்வி அலுவலர் உஷாராணி, திருப்புல்லாணி வட்டார வள மையம் மேற்பார்வையாளர் சேதுபதி, இல்லம் தேடி கல்வி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் முருகவேல் உள்பட ஏராளமானோர் விழாவில் கலந்து கொண்டனர்.

    பயிற்சி முகாமில் கலந்துகொண்ட 70-க்கும் அதிகமான குழந்தைகளுக்கு எம் எம் கே முஹைதீன் இப்ராஹிம் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். ஆளுமைத்திறன், ஆங்கில பயிற்சி, கைவினைப் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சிகளை அளித்ததால் குழந்தைகள் பெரிதும் பயன் அடைந்ததாக குழந்தை களின் பெற்றோர்கள் தெரிவித்தனர். 

    இதற்கான சிறப்பான ஏற்பாடுகளை வி டீம் சமூக சேவை அமைப்பு நிர்வாகி எம்.எம்.கே.பாத்திமா நவ்ரா கற்க, கசடற கல்வி அறக்கட்டளை நிர்வாகி ஆய்சத் ஷிபான் செய்தனர்.
    Next Story
    ×