என் மலர்
உள்ளூர் செய்திகள்
காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலில் 28-ந்தேதி ஆடிஅமாவாசை- முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
- ஆடிஅமாவாசைத் திருவிழவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால் அதிக அளவில் சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
- பொதுமக்கள் கோவிலுக்கு வரும் போது கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடித்து கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியினை கடைபிடிக்க வேண்டும்.
நெல்லை:
காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை பெருந்திருவிழா வருகிற 28-ந் தேதி (வியாழக்கிழமை)நடக்கிறது.
ஆலோசனை கூட்டம்
இதையொட்டி முன்னேற்பாடு நடவடிக்கை-கள் குறித்து துறை அலுவலர்களு–டனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் விஷ்ணு தலைமையில் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் ஆடி அமாவாசை விழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் அதிகளவில் வருவதால் அவர்களுக்கு அடிப்படை வசதிகளை பேரூராட்சி மற்றும் விக்கிரமசிங்கபுரம் நகராட்சியின் மூலம் செய்திட வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டார்.
அடிப்படை வசதிகள்
மேலும் குடிநீர் வசதிக்காக பெரிய அளவிலான டேங்குகள், தற்காலிக கழிப்பிடங்களை அமைக்க வேண்டும். தினமும் விரைவாக குப்பைகளை அப்புறப்படுத்தவும்,
கோவிலுக்கு வாகனங்களில் வரும் பக்தர்களுக்கு தற்காலிக வாகன நிறுத்துமிடங்களை அமைக்க உத்தரவிட்டார்.
ஆடிஅமாவாசைத் திருவிழவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால் அதிக அளவில் சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். சிறப்பு பேருந்துகளில் பக்தர்கள் கொண்டு வரும் உடமைகளை இலவசமாக எடுத்து செல்ல ஏற்பாடு செய்ய அறிவுறுத்தினார்.
அதேபோல் விழாவல் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோவிலுக்கு வரும் போது கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடித்து கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியினை கடைபிடிக்க வேண்டும்.
ஒருமுறை பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டார். இைதத்தொடர்ந்து விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.
கூட்டத்தில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் துணை இயக்குநர் செண்பகபிரியா, சேரன்மகாதேவி சப்-கலெக்டர் ரிஷப், இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதா, வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ்குமார் உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.