என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![சங்கரன்கோவிலில் தூய்மை பணியாளர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் சங்கரன்கோவிலில் தூய்மை பணியாளர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்](https://media.maalaimalar.com/h-upload/2023/07/20/1918512-6sanitationworkerprotest.webp)
2-வது நாளாக இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்.
சங்கரன்கோவிலில் தூய்மை பணியாளர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு கடந்த 2 மாதமாக சம்பளம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
- இதனை கண்டித்து நேற்று, சங்கரன்கோவில் மாதாங்கோவில் தெருவில் உள்ள ஒப்பந்த தூய்மை பணியாளர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்கரன்கோவில் :
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி யில் 90-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த 2 மாதமாக சம்பளம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
தூய்மை பணியாளர்கள்
இதனை கண்டித்து நேற்று, சங்கரன்கோவில் மாதாங்கோ வில் தெருவில் உள்ள ஒப்பந்த தூய்மை பணியாளர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் சங்கரன்கோ வில் நகராட்சி சுகாதார அலுவலர் பாலச்சந்தர், சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தை சேர்ந்த மாணிக்கம் செல்வின், சின்னத்துரை ஆகியோரிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட னர்.
முடிவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் பேரில் தர்ணா போராட்டத்தை கைவிட்டு தங்கள் பணியில் ஈடுபட்டனர். ஆனால் கூறியபடி நேற்று மாலை சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது.
2-வது நாளாக போராட்டம்
இதனை கண்டித்து 2-வது நாளாக இன்று காலை வேலை நிறுத்த போராட்டத்தில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.