என் மலர்
உள்ளூர் செய்திகள்

கற்கள் கடத்திய 3 லாரிகள் பறிமுதல்

- கல்லுக்குறுக்கி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- லாரியை சோதனை செய்த போது அதில் அனுமதியின்றி கற்களை கொண்டு வந்தது தெரிய வந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கனிம வளத்துறை உதவி இயக்குனர் பொன்னுசாமி மற்றும் அதிகாரிகள் ராயக்கோட்டை சாலையில் மூங்கில்புதூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் நின்ற 2 லாரிகளை சோதனை செய்த போது அதில் தலா 2 யூனிட் உடை கற்களை கடத்திவந்தது தெரிய வந்தது. விசாரணையில் அந்த கற்களை மாதேப்பள்ளியில் இருந்து கிருஷ்ணகிரிக்கு கொண்டு செல்ல முயன்றது தெரிய வந்தது.
இது குறித்து அதிகாரி பொன்னுசாமி கொடுதுத புகாரின் பேரில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 லாரிகளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதேபோல கல்லுக்குறுக்கி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதியில் நின்ற லாரியை சோதனை செய்த போது அதில் அனுமதியின்றி கற்களை கொண்டு வந்தது தெரிய வந்தது. அது குறித்து அதிகாரி பொன்னுசாமி கொடுத்த புகாரின் பேரில் மகராஜகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்தனர்.
சிங்காரப்பேட்டை போலீசார் நாயக்கனூர் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய சிவக்குமார் (43), தர்மலிங்கம் (38), அருண்குமார் (28), பிரசாந்த் (28) ஆகிய 4 பேரை கைது செய்த போலீசார் ரூ.300 பறிமுதல் செய்தனர்.